நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ஒரு இயக்குனரா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்… - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ஒரு இயக்குனரா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்…

CINEMA

நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ஒரு இயக்குனரா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் நடிகையர் திலகம் .

இந்த திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷிற்கு உடன்பிறந்த ஒரு சகோதரி உள்ளார்.

அவரின் பெயர் ரேவதி. இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது தேங்க்யூ என்ற குறும்படம் ஒன்றை அவர் எடுத்துள்ளார்.

அந்தப் படத்தை ரேவதியின் தந்தை சுரேஷ்குமார் மற்றும் அவரின் கணவர் நிதி மோகன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. ரேவதி முன்னதாக மலையாள பிரபல இயக்குனர் பிரியதர்ஷினி இடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது இவரை இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட சில அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top