CINEMA
“மாதம் ரூ.10 ஆயிரம் மட்டும் தான்”.. சரண்யாவுக்கு கண்டிஷன் போட்ட பொன்வண்ணன்.. பல வருடம் கழித்து அவரே உடைத்த சீக்ரெட்..!!
பொதுவாகவே ஒரே துறையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது வழக்கமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். அதன்படி தமிழ் சினிமாவில் பல காதல் ஜோடிகள் திருமண வாழ்க்கையிலும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் நடிகர் பொன்வண்ணன் மற்றும் நடிகை சரண்யா தம்பதியை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இயக்குனர் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் தான் பொன்வண்ணன். அப்போது தன்னுடைய படங்களில் பொன்வண்ணனை பாரதிராஜா நடிக்க வைத்தார்.
புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி அதன் பிறகு கருத்தம்மா மற்றும் பசும்பொன் உள்ளிட்ட படங்களில் பொன்வண்ணனை நடிக்க வைத்திருப்பார். பிறகு அன்னை வயல், கோமதி நாயகம் மற்றும் ஜமீலா ஆகிய மூன்று சிறிய திரைப்படங்களை பொன்வண்ணன் இயக்கவும் செய்தார். இடையில் அண்ணாமலை என்ற சீரியல் கோமதிநாயகம் என்ற நகைச்சுவை வில்லனாகவும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பருத்திவீரன் திரைப்படம் மூலம் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதல்முறையாக சரண்யாவை சந்தித்தார்.
அந்தப் படத்தில் அவர்கள் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். ஆனால் படத்தில் அசோசியேட்டாக இருந்ததால் ஷூட்டிங்கில் எப்பவும் அவர் பிசியாக இருந்ததாகவும் தன்னிடம் பேசியது கூட இல்லை என்றும் சரண்யா கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் மெல்ல பேசத் தொடங்கி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு பொன்வண்ணன் சரண்யாவுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதாவது சரண்யாவிடம், தனக்கு மாதம் 10 ஆயிரம் மட்டும் தான் சம்பளம். இந்த பணத்தை ஒரு வருடத்திற்கு அப்படியே பேங்க் அக்கவுண்டில் போட்டு விடுவேன். மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம். பேஸ்புக்கை அப்படியே உங்க கையில் கொடுத்து விடுகிறேன். மாதம் 10 ஆயிரம் ரூபாயில் குடும்பம் நடத்த வேண்டும். இதுதான் என்னுடைய அடிப்படையான கண்டிஷன். உங்க குடும்பத்தில் இருந்து எனக்கு எந்த ஒரு பொருளாதார உதவியும் வேண்டாம். அதனைப் போலவே என் குடும்பத்தில் இருந்தும் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று கண்டிஷன் போட்டேன். அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நான் சொன்னது போல குடும்பம் நடத்தினாங்க என்று பொன்வண்ணன் வெளிப்படையாக பேசியுள்ளார்.