மருத்துவமனையில் பணமில்லாமல் தவித்த பொன்னம்பலம்… பல லட்சங்களை பத்தே நிமிடத்தில் கொடுத்த பிரபல நடிகர்… அந்த மனசு தான் சார் கடவுள்…

மருத்துவமனையில் பணமில்லாமல் தவித்த பொன்னம்பலம்… பல லட்சங்களை பத்தே நிமிடத்தில் கொடுத்த பிரபல நடிகர்… அந்த மனசு தான் சார் கடவுள்…

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் நடிகர் பொன்னம்பலம். இவர் முதன் முதலில் ஸ்டண்ட் மேனாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இதன்பின் அபூர்வ சகோதரர்கள், நாட்டாமை உள்ளிட்ட பல திரைப்படங்களில்  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தனது உடல் அமைப்பு மற்றும் கம்பீரமான பேச்சால் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பலத்த வரவேற்பை பெற்றார்.

1988 ல் வெளியான ‘கலியுகம்’ திரைப்படத்தில் ஜெயில் கைதியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவர் தற்பொழுது வரை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நடிகர் பொன்னம்பலம் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் நடந்தது. நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நேரத்தில் தனக்கு உதவி கேட்டு பிரபலங்கள் சிலருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதைப்பற்றி கேள்விப்பட்ட பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உடனே போன் செய்து அவருக்கு ரூபாய் 45 லட்சம் கொடுத்து உதவி செய்தாராம். அவர் மட்டுமின்றி நடிகர் தனுஷ், அர்ஜுன் சரத்குமார் என பல நடிகர்களும் உதவி செய்தார்கள் என பொன்னம்பலம் கூறியிருந்தார்.

Begam