“சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார் சௌமியா”….. மேடையிலேயே அன்புமணி ஓபன் டாக்…. மிரண்டுபோன அரசியல் களம்….!

By Nanthini on ஆவணி 30, 2026

Spread the love

சென்னையை பெருவெள்ள ஆபத்திலிருந்து காப்பாற்றவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை உடனடியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை செய்து பாதுகாக்க வேண்டும் என பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸும், அவரது மனைவியும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணியும் இணைந்து தீவிர மக்கள் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாடு சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார் எனது மனைவி செளமியா” எனக் குறிப்பிட்டதுடன், நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 15,000 ஏக்கராக பரந்து விரிந்திருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையற்ற நகர்ப்புற வளர்ச்சியால் தற்போது வெறும் 2,500 ஏக்கராகச் சுருங்கிவிட்டதாகக் கவலை தெரிவித்தார். மேலும், ஈரநில ஆணையம் அமைக்கப்பட்டும் அதை முறையாகப் பாதுகாக்காத திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்வதற்காகவே இந்நிலத்தை அறிவிக்கை செய்யாமல் துரோகம் இழைப்பதாகவும், அரசுகளின் அலட்சியப்போக்கே இதற்குக் காரணம் என்றும் சாடினார்.

   

இத்துடன் நில்லாமல், மாநிலத்தின் பிற எல்லை சார்ந்த மற்றும் நீர் உரிமைச் சிக்கல்க குறித்தும் பிரசாரத்தில் அவர் பேசினார். மேகதாது அணட்டியைக் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகச் சுட்டிக்காட்டிய அன்புமணி, இதில் தமிழக அரசு காட்டும் அமைதியும் அலட்சியமும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிமையைத் தாரைவார்ப்பதற்குச் சமம் என்று எச்சரித்தார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் மௌனம் நல்லதல்ல எனக் குறிப்பிட்ட அவர், உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.