வங்கி கணக்கில் ரூ.2000… தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு… உடனே கிளம்புங்க…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

நலிவடைந்த விவசாயிகள் அனைவரும் பயன்பெறுவதற்காகவே மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இப்படியான நிலையில் அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விவசாய அடையாள எண்ணை பதிவு செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகளுக்கு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.