“எனக்கு வயசு ஆகிட்டு… கொஞ்சம் கருணை காட்டுங்க…” அப்பா மாதிரி இருந்துட்டு இப்படியா…? கெஞ்சிய குற்றவாளி… கடிந்து கொண்ட பெண்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆவணி 6, 2026

Spread the love

கடந்த 2013-ஆம் ஆண்டு கோவாவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றின் லிஃப்ட்டில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ‘தஹல்கா’ பத்திரிகையின் நிறுவனரான தருண் தேஜ்பால் குற்றவாளி என பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு கோவா விசாரணை நீதிமன்றம் அவரை விடுவித்து அளித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் டாக்டர் நீலா கோகலே மற்றும் அமித் ஜாம்சண்டேகர் அடங்கிய அமர்வு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளது.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக, தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எட்டு வாரங்கள் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், தனக்கு 62 வயதாவதால் கருணை காட்ட வேண்டும் என்றும் தேஜ்பால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தந்தை ஸ்தானத்தில் இருந்தவர் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டதால் அவருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா கடுமையாக வாதிட்டார். 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் தீர்ப்பு இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.