ஐயோ நெஞ்சே பதறுது… 2 பிஞ்சு குழந்தைகளுடன் கால்வாயில் குதித்து தொழிலதிபர் தற்கொலை… ஆதார் கார்டு எடுக்கச் சென்றபோது நடந்த சோகம்…!

By Nanthini on கார்த்திகை 9, 2025

Spread the love

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த தீரஜ் ரபாரி என்ற தொழிலதிபருக்கு திருமணம் ஆகி ஜான்வி, ஜியா என்ற இரண்டு மகள்கள் இருந்தன. இதனிடையே தீரஜ் நேற்று முன்தினம் மாலை தன்னுடைய மகள்களை காரில் அடைத்துக் கொண்டு ஆதார் கார்டு எடுக்க செல்வதாக புறப்பட்டுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் மகள்களுடன் தீரஜ் வீடு திரும்பாத நிலையில் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் உடனே போலீசில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் ஆர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் திரட்சி தன்னுடைய நண்பருக்கு whatsapp மூலம் தகவல் கொடுத்துவிட்டு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் கால்வாயில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் மகள்களுடன் உயிரிழந்த தந்தை உட்பட மூன்று பேர் உடல்களையும் மீட்டனர். இதனைத் தொடர்ந்து மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரயோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.