90ஸ் காலகட்டத்தில் பிரபல தொகுப்பாளனியாக வலம் வந்தவர் பெப்சி உமா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவரது வசீகரமான குரலுக்கும், அழகுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பெப்சி உமாவிடம் பேசுவதற்காகவே ரசிகர்கள் போன் செய்து விருப்பமான பாடலை கேட்டனர். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கி சாதனை படைத்தார்.
பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அவருக்கு ஏராளமான காதல் கடிதம் வருமாம். அதனை பார்க்கவே பிரம்மிப்பாக இருக்குமாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சல்மான்கான், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் பெப்சி உமா அதனை நிராகரித்து விட்டார். பாரதிராஜா, கே.பாலச்சந்திரன் உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் பெப்சி உமாவுக்கு அழைப்பு வந்தது.
ஆனால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாததால் அதற்கு NO சொல்லிவிட்டாராம். பெப்சி உமா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பெப்சி உமா பேசிய பழைய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, அழகு என்ற வார்த்தையை சொல்லாதீங்க. அதை கேட்டாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அழியக்கூடிய இந்த அழகுக்கு ஏன் எல்லாரும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னு தெரியல.
மனிதனா இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் நம்ம அழகா இருக்கணும் அப்படிங்கிற எண்ணம் இருக்கும். அது ஒரு இயல்பான விஷயம். நம்ம அழகா இருக்கணும் சில பேர் புகழணும் அப்படின்னு நினைக்கிறது இயல்புதான். அதனை தவிர்க்க முடியாது. ஆனா அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது என்னால ஏத்துக்கவே முடியாது. குறிப்பா பெண்களை அழகை மட்டுமே மையப்படுத்தி எடை போடுவது முட்டாள்தனம். அது எனக்கு பிடிக்காது. மனச சந்தோஷப்படுத்துற எதுவுமே அழகுதான். எது வேணாலும் அழகாய் இருக்கலாம். மனசை சந்தோஷப்படுத்தினால் அது அழகுதான் என கூறியுள்ளார்.