TECH
உங்ககிட்ட பேங்க் அக்கவுண்ட் இல்லையா?.. கவலையை விடுங்க, இனி நீங்களும் UPI மூலம் பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா..?
நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் upi பேமெண்ட்டில் சில மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த முறை மீண்டும் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் வசதிகளின் வருகையால் மக்கள் தற்போது யுபிஐ கட்டணங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த புதிய மாற்றத்திற்கு பிறகு வங்கி கணக்கு இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் பணம் செலுத்திக் கொள்ள முடியும். இனி வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும் யூ பி ஐ வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPI பயன்படுத்த வங்கி கணக்கு மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருப்பது கட்டாயமாகும். தற்போது வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக இந்த புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி டெலிகேட்டட் பேமென்ட் சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவருக்கு வங்கி கணக்கு இருந்தால் வேறு எந்த பயனரும் அதை எளிதாக பயன்படுத்தலாம்.
தன்னுடைய சொந்த மொபைலில் இருந்து இதனை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பிட்ட இந்த வசதியானது சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதாவது சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கிரெடிட் கார்டு அல்லது கடன் தொகை உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியின் பலன் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மெயின் அக்கவுண்ட் வைத்திருப்பவர் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். அவர் யாரையும் பணம் செலுத்துவதற்கு அனுமதிக்கலாம். அனுமதி பெற்ற பிறகு பயனர்கள் தங்களுடைய சொந்த மொபைலில் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். Gpay செயலியில் UPI circle, UPI Voucher போன்ற புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வசதியை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.