நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதியும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மறுநாள் 10ம் தேதியும் வெளியாக உள்ளது. இதில் இருவரில் யாருடைய படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர் மல்டிபிளக்ஸ் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்
அவர் கூறுகையில், இப்போதைய நிலவரப்படி ஜனநாயகன் படத்திற்கு 650 தியேட்டர்களும் பராசக்தி படத்திற்கு 450 தியேட்டர்களும் ஒதுக்கி உள்ளோம். இது தவிர தி ராஜா சாப் என்ற பிரபாஸ் நடித்த படத்துக்கு 60 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒதுக்கீட்டில் சம்பந்தப்பட்ட படங்கள் திரைக்கு வரும் போது மாற்றங்கள் செய்யவும் வாய்ப்புள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். பராசக்தியை விட ஜனநாயகன் படத்திற்கு தமிழ்நாட்டில் 200 தியேட்டர்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டு இருப்பதை திருப்பூர் சுப்ரமணியன் உறுதிப்படுத்தி உள்ளார்.
