இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 590 பாராமெடிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேற்பார்வையாளர், மருந்தாளுநர், டயாலிசிஸ் தொழில்நுட்பவியலாளர், கதிரியக்க நிபுணர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்குப் பணிக்கு ஏற்ப மாதம் ரூ.21,700 முதல் ரூ.44,900 வரை ஆரம்பச் சம்பளத்துடன் அரசு விதிகளின்படியான சலுகைகளும் படிகளும் வழங்கப்படும். 1.1.2026 அன்றைய தேதியின்படி 18 முதல் 40 வயதுக்குள் உள்ள தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் வழக்கமான அரசு தளர்வுகள் அளிக்கப்படும். கணினி வழியிலான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி, பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.250 தேர்வு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சமாக, கணினி வழி எழுத்துத் தேர்வை எழுதிய பிறகு விண்ணப்பக் கட்டணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
