‘வலி என்றால் காதலின் வலி தான்.. வலிகளில் பெரிது’…  கதிரவனை பார்த்து கண் கலங்கி அழும் சிவின்!… வெளியானது ப்ரோமோ இதோ!…

‘வலி என்றால் காதலின் வலி தான்.. வலிகளில் பெரிது’…  கதிரவனை பார்த்து கண் கலங்கி அழும் சிவின்!… வெளியானது ப்ரோமோ இதோ!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களுக்கிடையே அன்பு, பாசம், சண்டை, காதல் என அனைத்தும் அரங்கேறி  வருகிறது.

இந்நிலையில் இந்த வார டாஸ்காக ஃப்ரீஸ் டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரீஸ் டாஸ்க்கின் படி போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இவர்களை பார்த்து போட்டியாளர்கள் கண்கலங்கி அழும் எமோஷனல் எபிசோடாக இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது.

இன்றைய நாளை முதல் ப்ரோமோவில் கதிரவனின் காதலி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் கதிரவன் அவரது காதலியுடன் இணைந்து இருப்பதை ஷிவின் பார்த்துக் கொண்டே உள்ளார்.

அவரைப் பார்த்த அமுதவாணன், ‘நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னால் புரியுமா?’ என்று பாட்டு பாட, உடனே சிவின் கண்கலங்கி அழுகிறார். இவ்வாறு இந்த புரோமோ நிறைவடைந்துள்ளது.

இதோ அந்தப் பிரமோ வீடியோ….

Begam