தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதனால் அவர்கள் தமிழ் சினிமாவின் லாரல் ஹார்டி என புகழ்பெற்றார்கள்.
அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். ஆனால் கவுண்டமணியோடு ஆதிக்க உடல்மொழி கொண்டவர். எல்லோரையும் எடுத்தெரிந்து பேசும் கதாபாத்திரம். இந்த இரண்டு எதிரெதிர் துருவ கதாபாத்திரங்களும் ஒன்று சேர்கையில் வித்தியாசமான நகைச்சுவைக் கூட்டணி தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தது.
கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. அதனால் இவர்கள் இருவரும் இருந்தால் படம் வியாபாரம் ஆகிவிடும் என தயாரிப்பாளர்கள் முதல் விநியோகஸ்தர்கள் வரை நினைத்து அவர்களை அனைத்துப் படங்களுக்கும் ஒன்றாக புக் செய்ய நிர்பந்தித்துள்ளனர்.
ஆனால் இயக்குனர் பி வாசு மட்டும் தன் படங்கள் இந்த கூட்டணி இருக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார். இது சம்மந்தமாக அவர் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் நேர்காணலில் பேசும்போது “என் படத்தில் நான் கவுண்டமணி செந்தில் காம்பினேஷனைப் பயன்படுத்தியதில்லை. ஒன்று கவுண்டமணி அண்ணன் இருப்பார் இல்லையென்றால் செந்தில் இருப்பார். அவர்களை தனித்தனியாகதான் பயன்படுத்தினேன். அப்போது எல்லோருமே அவர்கள் கூட்டணி இருந்தால் படம் வெற்றி பெறும் என்று நம்பினார்கள்.
ஆனால் எனக்கு அவர்களை தனித்தனியாக வைத்தும் காமெடி பண்ண முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் அப்படியொரு முடிவை எடுத்தேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் இப்போது கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகிய இருவரும் நடித்தாலும் கடந்த சில ஆண்டுகளாக இணைந்து நடிப்பதில்லை.