“ஆபிசுக்கு வரதுக்கு முன்னாடி இதை செக் பண்ணனும்…” சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு… கமிஷனர் அதிரடி…!!

By Devi Ramu on ஆவணி 18, 2026

Spread the love

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், தூய்மைப் பணிகள் மற்றும் அம்மா உணவகங்களில் உணவின் தரம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்ய மண்டல வாரியாக 15 நோடல் அதிகாரிகளைச் சென்னை மாநகராட்சி ஆணையர் நியமித்துள்ளார். நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தினமும் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே, காலை நேரத்தில் நேரடியாகக் களத்தில் இறங்கி அனைத்துப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையின் போது சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டிருந்தாலும், வரும் பருவமழையின் போது நகரில் வெள்ளம் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.