உதவி கேட்டு ஏமாற்றிய மோசடி பேர்வழிகள் யார்? ஆன்லைனில் பெரும் தொகையை பறிகொடுத்த ஏமாந்த இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார்!

By Elango on மார்கழி 27, 2025

Spread the love

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆன்லைனில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமாரை ஏமாற்றியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜீவி பிரகாஷ் குமார். பல படங்களில் பிஸியாக இசையமைத்து வருகிறார். அதே நேரத்தில் ஜிவி பிரகாஷ் குமார் உதவும் மனப்பான்மை கொண்டவர். யார் உதவி கேட்டால் செய்யும் கருணை மனம் கொண்டவர்.

அவரது எக்ஸ் பக்கத்தில் மாம் லிட்டில் கிங் என்ற ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து அவருக்கு ஒரு கோரிக்கை வந்துள்ளது. என் அம்மா இறந்து விட்டார். எனக்கு ஒரு தங்கச்சி மட்டும்தான். அப்பா இல்லை. என் அம்மாவை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லை. எனக்கு பதவி உதவி செய்யுங்கள் என்றும் ஜீவி பிரகாஷ் குமாரிடம் கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் அம்மா புகைப்படம் அதில் ஒருவரது புகைப்படமும் பொய்யாக பதிவிடப்பட்டுள்ளது.

   

அது 2002ம் ஆண்டில் ஆன்லைனில் எடுக்கப்பட்ட ஒரு பொய்யான புகைப்படம் என்பது பின்னர் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை உண்மை என நம்பிய ஜீவி பிரகாஷ் குமார், அந்த நபரின் ஜிபே நம்பரை வாங்கி 20 ஆயிரம் ரூபாய் அனுப்பி உதவி செய்திருக்கிறார். அந்த நபர் ஜீ வி பிரகாஷ் குமாரை ஏமாற்றியது பிறகுதான் தெரிந்துள்ளது. ஜீவி பிரகாஷூக்கு பலரும் ஆறுதல் கூறி வரும் நேரத்தில் அவரது நல்ல குணத்தை இப்படி பணத்துக்காக மோசடி செய்து ஏமாற்றி விட்டார்களே என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.