அட இவங்க தான் ரொமான்டிக் ஹீரோ நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவியா… எவ்வளவு அழகா இருக்காங்க… வைரலாகும் புகைப்படம் உள்ளே…

By Begam

Published on:

நடிகர் சித்தார்த் தனது முதல் மனைவி மோக்னா உடன் இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

திரையுலகில் முதலில் நடிகர் சித்தார்த் இயக்குனர் மணிரத்தினம் உடன்  உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.பின்னர் அவர் சங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் நடித்தார். பாய்ஸ், ஆயுத எழுத்து, எனக்குள்  ஒருவன், காவியத்தலைவன் போன்ற திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் வெளியாகி ஹிட்டானவை.

   

பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுகளில் சிக்கி இருக்கிறார். சமந்தா, திரிஷா,ஸ்ருதி ஹசன் போன்றோருடன் சித்தார்த் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கள்  வந்தது. சித்தார்த்  எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் அவரது கருத்துக்களை தைரியமாக சொல்லக்கூடியவர். சில மாதங்களுக்கு முன்னர் கூட சாய்னா நேவால் பற்றி ட்வீட்  போட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அதற்காக மன்னிப்பும் கேட்டார்.

சித்தாத் ரசிகைகளால் ரசிக்கப்படும் ரொமான்டிக் ஹீரோ.  நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறிய சித்தார்த் தற்பொழுது சினிமாவில் அவ்வளவாக நடிக்கவில்லை. இவர் நடிப்பில் பிரபலமாகியதை விட சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகியதே அதிகம்.

சித்தார்த் 2003 இல் மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்கள் மட்டுமே நீடித்தது. தனது மனைவி  நடிகர் மேக்னாவுடன்  சித்தார்த்தார் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்….