
VIDEOS
எனக்கும் அந்த நோய் இருக்கு… மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் மனம் திறந்த எஸ்.ஜே சூர்யா..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் வெளியான நிலையில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் ட்ராவல் கதையை இந்த படம் கொண்டுள்ளது. அனைவருக்கும் புரியும்படி ஆதிக் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும் இந்த படத்தில் டூயல் ரோல் பண்ணி உள்ளனர். சுனில், செல்வராகவன் மற்றும் அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்துள்ள நிலையில் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எஸ் ஜே சூர்யா தனக்கு ஓசிடி பிரச்சனை இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.