வெள்ளி நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…! தரத்தை உறுதி செய்ய அரசின் புதிய பிளான்… இந்த ஐடியா நல்லா இருக்கே…!!

By Devi Ramu on தை 8, 2026

Spread the love

தங்கத்தைப்போலவே இனி வெள்ளி நகைகளுக்கும் தரம் சார்ந்த ‘ஹால்மார்க்’ முத்திரையைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அண்மைக்காலமாக வெள்ளியின் விலை மிக வேகமாக உயர்ந்து வருவதால், சந்தையில் போலி நகைகளின் நடமாட்டத்தைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 7 ஆயிரம் டன் வரை வெள்ளி நுகரப்படும் நிலையில், நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க இந்தத் தரக்கட்டுப்பாட்டு முறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராம் 300 ரூபாயைத் தொடக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், நகைகள் மற்றும் கலைப்பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் முன்பாக, நகை வியாபாரிகள் மற்றும் இத்துறை சார்ந்த வல்லுநர்களுடன் அரசு விரிவான ஆலோசனைகளை நடத்தவுள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு வெள்ளிப் பொருளிலும் அதன் தூய்மையை உறுதி செய்யும் ஹால்மார்க் அடையாளம் இருப்பதை உறுதி செய்ய முடியும்.