இப்ப வர்ற படத்துல காமெடிங்கிற பேர்ல இதைத்தான் பண்றாங்க… கடுப்பான நடிகர் ரமேஷ் கண்ணா…

By Meena on செப்டம்பர் 24, 2024

Spread the love

ரமேஷ் கண்ணா தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். தனது ஐந்து வயது முதலே திரை உலக பயணத்தை ஆரம்பித்தவர் ரமேஷ் கண்ணா.

   

ஆர் எஸ் மனோகரின் நாடகக் குழுவில் சேர்ந்து தனது ஐந்து வயது முதல் 10 வயது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் ரமேஷ் கண்ணா. இந்திய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் பாராட்டுகளை பெற்றவர் ரமேஷ் கண்ணா.

   

ஆரம்பத்தில் கே எஸ் ரவிக்குமார், காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், விக்ரமன் ஆகிய இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார் ரமேஷ் கண்ணா. 1990 களின் நடுப்பகுதியில் நகைச்சுவை நடிகராக தனது திரையுலக பயணத்தை தொடங்கினர் ரமேஷ் கண்ணா.

 

சூரியவம்சம், காதல் மன்னன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், நீ வருவாய் என, அமர்க்களம், படையப்பா, ஜோடி, வானத்தைப்போல, ப்ரெண்ட்ஸ் போல பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ரமேஷ் கண்ணா.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ரமேஷ் கண்ணா தற்போதைய படங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இப்போதைய படங்களில் எல்லாம் காமெடியே இல்லை. எது காமெடி எதுக்கு சிரிக்கிறாங்கன்னு தெரியல. யோகி பாபு பன்ஞ் சொல்றாரு. அதுல காமெடி இல்ல என்று ஓபனாக பேசுகிறார் ரமேஷ் கண்ணா.