tnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. 6,574 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு…. தேர்வு எப்போது…? விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on ஐப்பசி 7, 2026

Spread the love

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 6,574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறைந்தபட்சக் கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ள இத்தேர்வுக்குத் தகுதியுடைய தேர்வர்கள் www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அக்டோபர் 6 முதல் நவம்பர் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 9 முதல் 11 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.