Connect with us

த்தூ.. நீ எல்லாம் ஒரு பொண்ணே இல்ல… அர்ச்சனாவை கேவலமாக பேசிய நிக்சன்… பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த அடுத்த சண்டை…

CINEMA

த்தூ.. நீ எல்லாம் ஒரு பொண்ணே இல்ல… அர்ச்சனாவை கேவலமாக பேசிய நிக்சன்… பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த அடுத்த சண்டை…

 

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாத இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

   

அந்த ப்ரோமோவில் நிக்சன் அர்ச்சனாவும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். நிக்சன் அர்ச்சனாவை பார்த்து ‘நீ எதுக்குமே தகுதி இல்லை ‘என்று ஆங்கிலத்தில் கூறுகிறார். இதனால் கடுப்பான அர்ச்சனா ‘இவர் ஒரு பொண்ண பத்தி தப்பு தப்பா பேசினாரு. எனக்கு வெளியிலேயே இந்த வினுஷா மேட்டர் தெரியும்’ என்று கூறுகிறார்.

மீண்டும் கோபமான நிக்சன் ‘திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டு இருக்காத’ என்று கூற,  அர்ச்சனா உடனே ‘கத்தாதே’ என்று நிக்சனை அதட்டுகிறார். உடனே நிக்சன் ‘நீ மூடு’ என்று அவரைப் பார்த்து கெட்ட வார்த்தையில் திட்ட, அர்ச்சனா உடனே ‘போடா’ என்று நிக்சனை, பார்த்து கூறுகிறார். ‘நீ மொத வாய மூடு. உன் பேச்சுக்கு நான் வந்தனா’ என்று நிக்சன் கேட்க அர்ச்சனா ‘மரியாதையா பேசு.உனக்கு அவ்வளவு தான் ‘  என கூறுகிறார்.

உடனே நிக்சன் ‘த்தூ நீ எல்லாம் ஒரு பொண்ணே கிடையாது. கருமம்’ என்றும் அர்ச்சனாவிடம் சண்டை இட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார். மொத்தத்தில் இன்று ஒரு பூகம்பம் காத்திருக்கிறது. சைலன்டாக இருந்தா அர்ச்சனா தற்பொழுது வில்லியாக மாறி வருகிறார் பிக் பாஸ் வீட்டில். இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு?  கமெண்ட்ல சொல்லுங்க. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

Continue Reading
To Top