எவனாவது அதிமுக பலவீனம்னு சொன்னா “அவனை வெட்டி போடுங்க” அதிமுக கூட்டத்தில் நிர்மலா பெரியசாமியின் சர்ச்சை பேச்சு…!!

By Soundarya on தை 8, 2026

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வாழவந்தான்குப்பத்தில், சேலம் – சென்னை புறவழிச்சாலையில் அதிமுக மகளிரணி எழுச்சி பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரான நிர்மலா பெரியசாமி கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், திரண்டு வந்திருந்த கூட்டத்தைக் சுட்டிக்காட்டி அதிமுகவின் பலத்தைப் பறைசாற்றினார்.

தொடர்ந்து ஆவேசமாகப் பேசிய அவர், “இந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகும் அண்ணா திமுக பலவீனமாக இருப்பதாக யாராவது சொன்னால், அவர்களை வெட்டிப் போடுங்கள்” எனத் தொண்டர்களிடம் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஒரு கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரே மேடையில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.