அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! ரூ.838 கோடியில் புதிய காப்பீட்டு திட்டம்… பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு…!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசுப் பணியாளர்களுக்கான அடிப்படை மருத்துவக் காப்பீட்டு வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சில குறிப்பிட்ட தீவிர நோய்களுக்கான காப்பீட்டு நிதி உதவி அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையிலும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

இத்துடன் அரிய வகை நோய்களுக்குப் சிகிச்சை பெற ரூ.15 லட்சம் வரை நிதி உதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2,992 மருத்துவச் சிகிச்சைகளை உள்ளடக்கிய இத்திட்டத்தின் கீழ் 1,535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சென்று சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் மருத்துவச் செலவுச் சுமையைப் பெருமளவில் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.