வங்கதேச நாட்டின் ராஜோயர் உபாசிலா எல்லைக்குட்பட்ட மொய்ஷுபூர் பகுதியில், 3.5 வயது நிரம்பிய பிஞ்சுச் சிறுமி ஒருவரைப் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் ஏமாற்றித் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மிருகத்தனமாகப் பாலியல் அத்துமீறல் செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் உலுக்கியுள்ளது.
சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட நபரை, சிறுமியின் தாய் நேரில் பார்த்து அலறியதையடுத்துக் குற்றவாளி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டான். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாகக் காவல்துறையினரின் உதவியோடு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் அப்பஞ்சுக் குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறிய சிறுமியின் தாய், எனது ஒரே மகளுக்கு இத்தகைய கொடுமையைச் செய்த அந்த மிருகத்திற்கு உடனடியாகத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனக் கதறி அழுது நீதி கோரியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
