தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கடும் அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. 1980 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரே சீட் தர மறுத்தபோதும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று தன் அரசியல் பலத்தை நிரூபித்த மூத்த தலைவரான செம்மலையை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெறுமனே போகிறபோக்கில் ஒரு ‘வணக்கம்’ மட்டும் சொல்லிவிட்டுச் சென்றது அவரது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரத்தின் போது செங்கோட்டையனைத் தவிர தவெகவின் பிற தலைவர்களோ நிர்வாகிகளோ அவரைப் பொருட்படுத்தவில்லை என்றும், குறைந்தபட்சம் தலைவரின் பிரச்சார வேனில் கூட அவரை ஏற்றி கௌரவிக்காதது தங்களை பெரும் அவமதிப்பிற்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
