பரபரக்கும் பீகார் தேர்தல்… தொடர்ந்து NDA கூட்டணி முன்னிலை.. வெல்லப்போவது யார்..?

By Soundarya on கார்த்திகை 14, 2025

Spread the love

பிஹார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை. இதனை பெறும் கூட்டணியே ஆட்சியமைக்க முடியும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் NDA கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, NDA – 162 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.MGB 76, ஜன் சுராஜ் – 3 மற்றவை – 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன. 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.