லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் மண்ணாங்கட்டி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நயன்தாரா படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் குழந்தைகளை கவனித்து கொள்வதிலும் நயன்தாரா எந்த குறையும் வைக்கவில்லை. மேலும் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நயன்தாரா தயாரிப்பு, பிசினஸ் என எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்.
தான் செய்யும் பிசினஸ்களை பிரமோட் செய்யும் விதமாக விளம்பரங்களையும் பொட்டோடையும் வெளியிடுவார். கடந்த ஜனவரி மாதம் நயன்தாரா Femi 9 பிராண்டில் சானிடரி நாப்கினை வெளியிட்டார். அந்த பிராண்டை விளம்பரப்படுத்தி பெண்கள் தங்களுக்கு வசதியான சானிட்டரி நாப்கினை அணிய வேண்டும் என நயன்தாரா கேட்டுக்கொண்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாரா மாதவிடாய் காலங்களில் பெண்கள் பலவிதமான ஹார்மோன் மாற்றங்களை சந்திப்பதை குறிப்பிட்டு Femi 9 பயன்படுத்தியதன் மூலம் சௌகரியத்தை கண்டுள்ளதாக கூறினார். இந்த நிலையில் பிரபல மலையாள பாடலுக்கு நயன்தாரா Femi 9 நாப்கினை கையில் வைத்துக்கொண்டு வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூகவலை பக்கத்தில் பகிர்ந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.
View this post on Instagram