உதவி இயக்குனரைத் திட்டிய நயன்தாரா… கொதித்தெழுந்த சுந்தர் சி.. மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சண்டை!

By vinoth on மார்ச் 25, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு.

   

அவரது படங்கள் எப்போதுமே மினிமம் கியாரண்டி என்பதற்கு சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படமே உதாரணம். இந்த படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸான பல படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.

   

 

 

அதையடுத்து அவர் நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கி வருகிரார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 10 நாட்களாக சென்னையில நடந்து வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா , சுந்தர் சி யின் உதவி இயக்குனர் ஒருவரோடு சண்டை போட்டு அவரைத் திட்டிவிட்டாராம். இதையறிந்த சுந்தர் சி கோபமாகி ஷூட்டிங்கையே நிறுத்திவிட்டாராம்.

மேலும் நயன்தாராவை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது என தயாரிப்புத் தரப்பிடமும் சொல்லிவிட்டாராம். ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தி ஷூட்டிங்கை திரும்ப நடத்த வைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.