விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய சேரன் பட நடிகை.. விலையை கேட்டா ஷாக் ஆயுடுவீங்க… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

By Priya Ram on ஜூலை 4, 2024

Spread the love

நடிகை நவ்யா நாயர் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன் முதலாக அழகிய தீயே படத்தின் மூலம் ஹீரோயினாக நவ்யா அறிமுகமானார். அதன் பிறகு சேரனின் மாயக்கண்ணாடி ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

actress navya nair puts up 'pre-loved' saris on sale Saree sale | Navya Nair: சேலை விற்கும் சேரன் பட நடிகை.. என்னப்பா இப்படி இறங்கிட்டாங்க?

   

ஆலப்புழாவை சேர்ந்த நவ்யா நாயர் கடந்த 2001-ஆம் ஆண்டு இஷ்டம் என்ற மலையாள திரைப்படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. நந்தனம், கல்யாணராமன், கிராமபோன், சேதுராம ஐயர், அம்மா கிளிக்கோடு, பட்டணத்தில் சுந்தரன், சர்க்கார் தாதா உள்ளிட்ட ஏராளமான மலையாள திரைப்படங்களில் நவ்யா நடித்துள்ளார்.

   

 

கடந்த 2010-ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை நவ்யா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நவ்யா நடித்தார். கடந்த 14 ஆண்டுகளில் ஆறு படங்களில் மட்டுமே நவ்யா நடித்துள்ளார். கடைசியாக நவ்யா நடிப்பில் ஜானகி ஜானகி என்ற படம் ரிலீஸ் ஆனது.

\

இந்த நிலையில் நவ்யா நாயர் BMW X7 என்ற புதிய காரை வாங்கி உள்ளார். இந்த காரின் விலை 1. 25 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நவ்யாகாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Navya Nair (@navyanair143)