அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு ஷூட்டிங் வராத கார்த்திக்.. நவரச நாயகனால் மனஉளைச்சலுக்கு ஆளான தயாரிப்பாளர்..

By Ranjith Kumar

Updated on:

1980, 90களில் மிக பிரபல தயாரிப்பாளராக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் “சுப்பையா”. இவர் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். அந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இவர் முக்கியமான ஒரு உறுப்பினராக இருந்தார். இவர் பண்ணாத படங்களை கிடையாது, இவர் தயாரிக்காத மாபெரும் படைப்புகளை சினிமாவில் இல்லை.

அப்படிப்பட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது 1995களில் அஜித், விஜய் இருவரும் முதல் முறையாக தமிழ் சினிமாவில் ஒன்றிணைந்து நடித்த படமான ராஜாவின் பார்வை என்ற படத்தை இயக்கி திரைக்கு கொண்டு வந்தவர்தான் “ஜானகி சௌந்தர்”. தற்போது அந்த காலகட்டத்தில் இவர் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் பிரபு, கார்த்திக், சரத்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களை வைத்து பல படம் இயக்கி உள்ளார். இப்ப படங்களை தயாரித்து வெளியிட்ட சுப்பையா பாண்டி அவர்கள், தற்போது தனியார் சேனல் ஒன்றில் நவரச நாயகன் கார்த்தி அவர்களை பற்றி சில விஷயங்களை மனம் உருகி வெளிப்படுத்தியுள்ளார்; ஜானகி சௌந்தர் இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் “கிளிக்” என்ற படத்தை சுப்பையா தயாரித்து வந்தார்கள்.

   

அதற்கான பூஜைகளையும், படத்தின் pre- production-னும் தயார் செய்து, நடிகர்களின் சமத்துவத்தோடு ஒப்புதல் பெற்று படத்தை தயாரிக்க முன் வந்தார்கள். கிட்டத்தட்ட படத்தை ஆரம்பித்து 50 நாள் படப்பிடிப்பு நடந்தது, ஆனால் கார்த்தி அவர்கள் படப்பிடிப்புக்கு சரியாக வராமல், அட்வான்ஸ் பணத்தை வாங்கி விட்டு இயக்குனரிடமும் தயாரிப்பாளர்களிடமும் சரியான பதிலை சொல்லாமல் தலைமறைவாகவே இருந்துள்ளார். சுப்பையாவும் சரி இயக்குனர் சௌந்தரும் சரி எவ்வளவு முன்வந்து கார்த்தியிடம் பேசியபோதும் கார்த்தி இதற்கு சரியான பதிலை அளிக்கவில்லையாம், சரி படம் தான் எடுக்கவில்லை பணம் ஆவது வாங்கிவிடலாம் என்று சுப்பையா சென்று பணத்தை கேட்டபோது, கார்த்தி வீட்டில் இல்லை, ஹோட்டலில் தங்கி இருக்கிறார் என்று கூறியுள்ளார்கள்.

அங்க போய் பார்த்தால், பக்கத்திலேயே இன்னொரு ரூம் போட்டு, அங்க இருந்துகிட்டு கார்த்தி இப்பதான் வெளில போய் இருக்காரு அப்படின்னு பொய் சொல்லிடுவாங்க. இப்படியே நடந்துகிட்டு இருக்க சுப்பையா அவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் நடிகர் சங்கத்தின் மூலமாகவும், இயக்குனர் சௌந்தர் வைத்து கார்த்தியிடம் பேசி கொடுத்த 15 லட்சம் அட்வான்ஸ் பணத்தில் மீதி 7 லட்சம் பணத்தை தான் பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை தற்போது தனியார் சேனல் ஒன்றில் மனம் உருகி பேசியிருக்கிறார்.

author avatar
Ranjith Kumar