“அலாரம் அடிக்க கூடாது…” சக்கரங்களுக்கு பதில் செங்கற்கள் மீது நின்ற கார்… நள்ளிரவில் அத்துமீறிய கும்பல்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on தை 10, 2026

Spread the love

உத்திரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஹிந்திரா தார் காரை மர்ம நபர்கள் நள்ளிரவில் குறிவைத்துள்ளனர். திருடுவதற்கு முன்பாக காரின் அலாரத்தைச் செயலிழக்கச் செய்ய அதன் கண்ணாடியை உடைத்த திருடர்கள், ஓட்டுநர் பக்கமிருந்த இரண்டு விலையுயர்ந்த சக்கரங்களையும் லாவகமாகக் கழற்றிச் சென்றனர். ஆட்கள் வருவதைக் கண்டதும் பயந்துபோன அந்தத் திருட்டுக் கும்பல், அவசர அவசரமாக அங்கிருந்து தப்பித்து மறைந்தது.

தற்போது அந்தச் சொகுசு கார் சக்கரங்கள் இன்றி வெறும் செங்கற்கள் மீது அந்தரத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ள காட்சிகள் இணையதளங்களில் வெளியாகிப் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருடப்பட்ட இடத்தைச் சுற்றி உடைந்த கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடக்கும் நிலையில், வாகன பாதுகாப்புக் குறித்த அச்சம் அந்தப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.