பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் கடந்த 1992-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே அவரது பாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களுக்கும் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இவருக்கு ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, தேசிய திரைப்பட விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது. இளம் தலைமுறையினரை கவரும் வகையில் ஏ.ஆர் ரகுமானின் பாடல்கள் இருக்கும். இப்போது ஒரு படத்திற்கு இசையமைக்க 8 முதல் 12 கோடி ரூபாய் வரை ஏ.ஆர் ரகுமான் சம்பளம் வாங்குகிறார். அவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் ரோஜா படத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
இப்போது ஏ.ஆர் ரகுமான் ஒரு பாடலுக்கு மட்டுமே 3 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒன்றிலிருந்து இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். ஏ.ஆர் ரகுமானின் சொத்து மதிப்பு 2,329 கோடி ரூபாய்($280மில்லியன்) என கூறப்படுகிறது. இவருக்கு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் சொகுசு வீடுகள் உள்ளது.
துபாயில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்ட இசை கூடம் அமைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் ஜாகுவார், மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ உள்ளிட்ட சொகுசு காரர்களை ஏ.ஆர் ரகுமான் வைத்துள்ளார். பல முன்னணி நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார். ஏ.ஆர் ரகுமான் சினிமாவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.