இசையமைப்பாளர் எஸ் தமனின் மனைவி பின்னணி பாடகரா?..  வைரலாகும் புகைப்படம் இதோ…

By Samrin

Published on:

தமிழ் திரை உலகில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர்  இசையமைப்பாளர் தமன்.

   

தமன் தன்னுடைய ஐந்து வயதிலேயே தந்தையை இழந்தார். இவர்  சிறுவயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்ட இவருக்கு பக்கபலமாக இருந்தவர் பிரபல பாடகர்  எஸ் பி பாலசுப்பிரமணியம்.

இவர் எஸ் பி பியின் ட்ரூப்பில் டிரம்ஸ் வாசிப்பவராக இருந்துள்ளார். இவர் சங்கரி இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படத்தில்  ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் திரைப்படத்தில் சிந்தனை செய் ,அய்யனார் ,வந்தேன் வென்றேன், போன்ற  படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இவர் ‘சிந்தனை செய்’ என்ற படத்தில் இசையமைத்து  தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து  தெலுங்கு படமான ‘கிக் ‘என்ற படத்தில் இசையமைத்து தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராக  அறிமுகமானார்.

இவர்தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இவர் காஞ்சனா, ஒஸ்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் ஒரு இசையமைப்பாளர் ,பின்னணி பாடகர், இசைக்கருவி வாசிப்பவர் ,என பன்முகத் திறமைகளை கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர் இசையில்  உருவாகி வெளிவந்த பல திரைப்படபாடல்கள்  மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’படத்திற்க்கு  இசையமைத்துள்ளார்.இப்படத்திலிருந்து வெளிவந்த அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ரஞ்சிதமே, சோல் ஆஃப் வாரிசு ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

இசையமைப்பாளர் தமன் பின்னணி பாடகி  ஸ்ரீவர்தினி  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  அஷ்யுத் என்ற மகன் உள்ளார்.

தற்போது ஸ்ரீவர்தினி  விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் நீயா?.. நானா?.. எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர்களின் குடும்ப புகைப்படமானது   இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது