அந்த விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகையை திட்டிய எம்.ஆர் ராதா..!!

By admin on ஆனி 14, 2024

Spread the love

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் எம்.ஆர் ராதா. இவர் நகைச்சுவை மற்றும் வில்லன் கதாபாத்திரத்திற்கு பெயர் பெற்றவர். எம்.ஆர் ராதா திராவிட புது மலர்ச்சி நாடக சபா என்ற நாடக குழு மூலமாக பல நாடகங்களை நடத்தினார். தமிழ் சினிமாவில் முதன் முதலாக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் எம்.ஆர் ராதா தான்.

எம்.ஆர். ராதாவின் துணிச்சல்... | Tamil news MR Radha story

   

சினிமா துறையிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு யாருக்கும் தலை வணங்காமல் இருந்தவர் எம்.ஆர் ராதா. எம்.ஆர் ராதா நடிப்பில் வெளியான பாவமன்னிப்பு, ரத்தக்கண்ணீர், பாதகாணிக்கை, பட்டினத்தார் ஆகிய படங்கள் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடிப்பை பலரும் பாராட்டினார்கள். எம்.ஆர் ராதா தனக்கென ஒரு தனித்துவமான நடிப்பை கொண்டுள்ளார்.

   

சினிமாக்காரனை கொண்டு வந்து அரசியல்ல நிறுத்தாதே!… அப்போதே சொன்ன எம்.ஆர்.ராதா  - CineReporters

 

ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் எம்.ஆர் ராதா தனக்கான காட்சிகளை நடித்து முடித்தார். அதன் பிறகு பத்மினி பிரியதர்ஷினி அவருக்கான காட்சிகளை நடித்து கொண்டிருந்தார். அந்த படத்தில் பத்மினி பிரியதர்ஷினி குடும்பப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது நடத்தையை சிலர் தவறாக கூறுகின்றனர். அதற்கு கவலைப்பட்டு கதறி அழுவதுதான் அந்த காட்சி. அந்த காட்சியில் பத்மினி நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஆர் ராதா கட் கட் எனக் கூறி நிறுத்திவிட்டார்.

Padmini Priyadarshini - Wikipedia

பின்னர் பத்மினியிம் சென்று ஒரு குடும்ப பெண்ணாக நடிக்கிறாய். உனது நடத்தையை தவறாக கூறுகிறார்கள் என்றால் அதற்கு எப்படி நடிக்க வேண்டும். இப்படி உணர்ச்சி இல்லாமல் நடிக்க கூடாது. இந்த மாதிரி தான் நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார். அவர் சொல்லிக் கொடுத்தபடியே பத்மினி பிரியதர்ஷினி சிறப்பாக அந்த காட்சியில் நடித்து முடிக்கிறார். தான் மட்டுமில்லாமல் தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதுதான் எம்.ஆர் ராதாவின் எண்ணம்.

Padmini Priyadarshini | Cinema Chaat