“மாமியார் கொடுமையால் கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்த இளம்பெண்”… நெஞ்சை உறைய வைக்கும் சோகம்…!

By Nanthini on சித்திரை 17, 2026

Spread the love

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் தாய் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜராஜன் என்பவரின் மனைவி பவித்ரா (24), தனது ஒரு வயது பெண் குழந்தை மகிஷாவுடன் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்துள்ளார். குடும்பத் தகராறு மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பவித்ரா இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தை மகிஷா, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார், பவித்ராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஒரு சிறிய குடும்பப் பிரச்சினை ஒரு இளம் தாயின் உயிரைப் பறித்து, பச்சிளம் குழந்தையைத் தவிக்க விட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.