அமெரிக்காவில் நடைபெற்றதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கொடூரச் சாலை விபத்து வீடியோ ஒன்று இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சம்பவத்தில், காரின் முன்பகுதியில் இருந்த தந்தையும் மகனும் சீட் பெல்ட் முறையாக அணிந்திருந்ததால், கொடூர விபத்திலும் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
அதே வேளையில், காரின் பின்பகுதியில் இருந்த தாயும் மகனும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால், மோதலின் அதிர்வில் காரை விட்டு வெளியே தூக்கி வீசப்பட்டு இருவருக்கும் கைகள் முறிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த வீடியோ அமெரிக்காவில் நடந்ததா அல்லது சீனாவில் நடைபெற்றதா என்பது குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் கிளம்பியுள்ளன. எது எப்படி இருப்பினும், காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் இருக்கைப் பட்டை அணிய வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த விபத்து வீடியோ காட்சி தற்போது தீயாகப் பரவி வருகிறது.
