அம்மா! என் முகவரி நீயம்மா!… என் முதல் வரி நீயம்மா!… ரக்ஷிதா எமோஷனலாக கண்கலங்கி தருணம்!… உணர்ச்சி பொங்க வெளியான ப்ரோமோ இதோ!…

அம்மா! என் முகவரி நீயம்மா!… என் முதல் வரி நீயம்மா!… ரக்ஷிதா எமோஷனலாக கண்கலங்கி தருணம்!… உணர்ச்சி பொங்க வெளியான ப்ரோமோ இதோ!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சி தற்பொழுது 80 நாட்களை நிறைவு செய்துள்ளது. இறுதி கட்டத்தில் எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வெல்வது யார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது.

21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இனிவரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால் அனைத்து போட்டியாளர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி சிறந்த முறையில் விளையாடிக் கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து பிக் பாஸ் இந்த வாரத்திற்கான டாஸ்காக முதலில் ‘மணிக்கொடி டாஸ்க்’ அறிவித்திருந்தார்.

ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ‘ப்ரீஸ்டாஸ்க்’ கொடுத்தார். இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி, சிவின், அமுதவாணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ரட்சிதாவின் அம்மா மற்றும் குடும்பத்தார் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இவர்களை பார்த்து ரக்ஷிதா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து  சந்தோஷப்படுகிறார்.

அதன் பிறகு அவரின் அம்மா ஒரு புகைப்படத்தை கொடுக்க அதை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்து, தனது அம்மாவின் கையால் சாப்பிட்டு, அவரின் மடியில் படுத்து உறங்குகின்றார். இவ்வாறு இந்த பிரமோ முடிந்துள்ளது .

இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam