40 வயதில் நீண்ட நாள் காதலனை கரம் பிடித்த பிரபல நடிகை.. வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..

By Ranjith Kumar

Published on:

கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோயினாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் மீரா சோப்ரா என்னும் நிலா. தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த அன்பே ஆருயிரே படத்தில் நடித்து முதல் முதலாக கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில், தன் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்ததால், இதற்கு அடுத்ததாக மாபெரும் படங்கள் இவருக்கு குவிய ஆரம்பித்தது.

அந்த வரிசையில் லி, ஜகன் மோகினி, காளை, இசை, மருதமலை, ஜாம்பவான் போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்திருந்தார். இவர் தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், போஜ்புரி போன்ற மொழிகளில் நடித்து முன்னணி கதாநாயகியாக தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து வந்து கொண்டிருந்தார், அதன் பின்னதாக தனது தந்தையின் தொழிலை கையில் எடுத்து, அதை கவனித்து வந்ததால் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. அதன் பின்னராக சினிமா துறையில் இருந்து அவர் விலகி விட்டார்.

   

தற்போது இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த நிலையில் ஜெயப்பூரில் வைத்து நீண்ட நாள் காதலரான ரட்ஷீத் அவர்களை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட பல வருட காலமாக காதலித்து வந்த இவர் தற்போது 40 வயதை கடந்து விட்டது, இருப்பினும் தன் வாழ்க்கையை தற்போது தான் ஆரம்பித்திருக்கிறேன் என்று இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் பாலிவுட் பிரபல கதாநாயகியாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா மற்றும் பரீனி சோப்ரா அவர்களின் தங்கைதான் இந்த நிலா.

திருமணத்திற்காக நீரா சோப்ரா பிரபல ஆடை நிபுணரான சப்யாசாச்சி அவர்களின் கைவண்ணத்தில் உருவான சிவப்பு நிற லெகங்காவில் தனது திருமணத்தில் மிக பிரகாசமாக ஜொலித்தார். இவர் கணவர் ரக்ஷீத் அவர்களும் வெள்ளை நிற சர்வானியில் மிக அழகாக இருவரும் தன் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதற்காக மீரா வின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Meera Chopra (@meerachopra)

author avatar
Ranjith Kumar