ஆந்திர மாநிலம், மார்க்கபுரம் மாவட்டம் யெர்ரகோண்டபாலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆஞ்சநேயலு என்ற வாலிபர், பெற்றோர் இல்லாத நிலையில் தனது அக்கா மற்றும் மாமாவின் ஆதரவில் வளர்ந்து வந்தார். இவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது அக்கா, கடந்த மே 13-ஆம் தேதி அவரைப் பெண் பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். பெண் பார்த்துவிட்டு வீடு திரும்பிய வழியில், ஆஞ்சநேயலு தனக்கு ஒரு முக்கிய வேலை இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், யெர்ரகோண்டபாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆஞ்சநேயலுவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அது கடைசியாக பொட்டிரெட்டிபல்லி பகுதியில் காட்டியுள்ளது. உடனே அந்தப் பகுதிக்குச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், வெங்கட்ராமன் – ரமணா தம்பதியின் 15 வயது சிறுமிக்கும் ஆஞ்சநேயலுவுக்கும் இடையே காதல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர் மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவர்களை ரகசியமாகத் தனிப்படை அமைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
அந்த விசாரணையில், பார்ப்போரையே உறைய வைக்கும் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. கடந்த மே 13-ஆம் தேதி, தனது பெற்றோர் வீட்டில் இல்லாததை அறிந்த அச்சிறுமி, ஆஞ்சநேயலுவை தொலைபேசி மூலம் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி, அன்று இரவு 10.30 மணியளவில் ஆஞ்சநேயலு சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இருவரும் தனிமையில் இருந்த வேளையில், எதிர்பாராத விதமாக சிறுமியின் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அங்கு தன் மகள் இருந்த கோலத்தைக் கண்டு ஆத்திரமடைந்த தந்தை வெங்கட்ராமன், அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஆஞ்சநேயலுவைச் சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலையை மறைக்கத் திட்டமிட்ட வெங்கட்ராமன், ஆஞ்சநேயலுவின் உடலை பன்றி வெட்டும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி, அருகில் இருந்த 100 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் வீசியுள்ளார். இந்த அதிர்ச்சித் தகவலை அடுத்து, வெங்கட்ராமன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், ஆழ்துளைக் கிணற்றில் வீசப்பட்ட ஆஞ்சநேயலுவின் உடலை மீட்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காதலித்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவரைத் துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…