ஆவின் கொடுத்த செம ஷாக்… பால் உற்பத்தியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… அமைச்சர் சொன்ன அந்த ‘சூப்பர்’ நியூஸ்…!

By SATHISH R on ஆனி 29, 2026

Spread the love

விழுப்புரம் ஆவின் பால் பண்ணையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பாலின் தரத்தை பரிசோதிக்கும் முறைகள், பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யப்படும் விதம் உள்ளிட்ட ஆலையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் அவர் விரிவாகக் கேட்டறிந்தார். தமிழக மக்களுக்குத் தரமான ஆவின் பால் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட அமைச்சர், நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆகிய இருதரப்பின் நலன்களையும் அரசு சமமாகப் பாதுகாக்கும் என உறுதியளித்தார்.

மாநிலம் முழுவதும் ஆவின் பால் மற்றும் அதன் நெய், தயிர், வெண்ணெய், பன்னீர் போன்ற உபபொருட்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூடுதல் ஆவின் விற்பனை நிலையங்களைத் தொடங்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், விரைவில் புதிய ஆவின் நிலையங்கள் மற்றும் பார்லர்களைத் திறப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

   

பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்த அமைச்சர் விஜயலட்சுமி, விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் மாட்டுத் தீவனங்களின் விலை உயர்வு போன்ற காரணிகளைக் கணக்கில் கொண்டு, இந்த கொள்முதல் விலை உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் அவர் பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

   

ஆவின் பொருட்கள் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ஆவின் பார்லர்களிலும் தரமான தயாரிப்புகள் தங்குதடையின்றி கிடைக்கத் தேவையான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், நுகர்வோரின் திருப்தியும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாடும் ஒன்றிணைந்தே அரசின் இலக்காகச் செயல்படும் எனத் தனது செய்தியாளர் சந்திப்பில் நிறைவாகக் குறிப்பிட்டார்.