கல்யாணத்திற்கு கூப்பிடாத ரேவதி… வீட்டிற்கு அழைத்து பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர்… அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!

By Priya Ram on அக்டோபர் 15, 2024

Spread the love

80ஸ், 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ரேவதி. கடந்த 1981ம் ஆண்டு ரிலீசான மண்வாசனை திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார்.புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், உதயகீதம், ஆன் பாவம், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ரேவதி நடித்துள்ளார்.

   

நடிகை ரேவதி தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு மீடிர் மை பிரண்ட் என்ற ஆங்கில படத்தை ரேவதி இயக்கினார்.சமீபத்தில் ரேவதி சித்ரா லட்சுமணன் உடனான ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.

   

 

அப்போது சித்ரா லட்சுமணன் எம்ஜிஆர் உங்களை கூப்பிட்டு திருமணத்திற்கு பரிசு கொடுத்தாராமே என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த ரேவதி நான் திருமணத்திற்கு நிறைய பேரை கூப்பிடவில்லை. எனக்கு சிஎம் அலுவலகத்தில் இருந்து போன் கால் வந்தது. முதலமைச்சர் உங்களை பார்க்க வேண்டும் என கூறியதாக சொன்னார்கள். அதனை நாம் நம்பவில்லை.

அதன் பிறகு அம்மா என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்தார். நானும் என் கணவரும் அங்கு சென்றோம். அப்போது எம்.ஜி.ஆர் ஒரு தங்க சங்கிலியை எனது கணவர் கையில் கொடுத்து கல்யாணத்துக்கு தான் கூப்பிடல.. இப்பவாது இந்த செயினை போட்டு விடு அப்படின்னு சொன்னாரு. என் கணவர் சுரேஷ் செயினை போட்டுவிட்டார். அந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது என ரேவதி கூறியுள்ளார்.