மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று, கோலாகலமாக நடந்தது. மணமகன் சுஜல் சமுத்ரே(22) தன்னுடைய புது மனைவியுடன் மேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராகவ் என்ற நபர் விறுவிறுப்பாக மேடைக்கு சென்று மணமகனை சரமாரியாக குத்தி விட்டு தன்னுடைய நண்பரோடு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றார். இந்த காட்சி அங்கு பறந்து கொண்டு இருந்த ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது. திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜே சேவைகளுக்கான கட்டணம் தருவதில் மணமகனுக்கும் ராகவ் என்ற நபருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதில் மணமகன் ராகவ தவறாக பேசி அவர் மீது செல்போனை வீசி அடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தகராறில் மணமகன் நண்பர்கள் ராகவ் வீட்டை சேதப்படுத்தி தங்கள் பைக்கை தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் ராகவ் மணமகனின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது மணமகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடந்த உடனேயே அரங்கத்தில் இருந்த ட்ரோன் கேமரா ராகவ் வாகனத்தை பின்தொடர ஆரம்பித்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணித்த கேமரா அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்துள்ளது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்
