நாட்டின் முன்னணி தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இந்தியா முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர் மற்றும் மூத்த வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வங்கித் துறையில் கடன் வழங்கல், கடன் பரிசீலனை அல்லது MSME பிரிவுகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்குப் பதவிக்கு ஏற்ப ஆண்டுக்கு ரூ.9.4 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.19.5 லட்சம் வரை கணிசமான சம்பளம் வழங்கப்படவுள்ளது. 35 முதல் 38 வயதிற்குட்பட்ட தகுதியான நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எந்தவித விண்ணப்பக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://apps.tmbdigital.bank.in/ சென்று ஆன்லைன் மூலமாக வரும் அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
