Connect with us

‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படம் பண்ண வேலை.. அதிரடி முடிவெடுத்த அமலாக்கத்துறை.. கடும் அதிர்ச்சியில் மலையாள சினிமா..!

CINEMA

‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படம் பண்ண வேலை.. அதிரடி முடிவெடுத்த அமலாக்கத்துறை.. கடும் அதிர்ச்சியில் மலையாள சினிமா..!

 

மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி வசூல் செய்து விட்டதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்த நிலையில் அமலாக்கத் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மலையாள சினிமாவில் இந்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மஞ்சுமேல் பாய்ஸ். இந்த திரைப்படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் சக்க போடு போட்டது, வசூலிலும் மிகப்பெரிய அளவு சாதனை செய்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 100 மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

   

வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றியைப் பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மீது நிதி மோசடி புகார் சமீபத்தில் அளிக்கப்பட்டது. அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர் படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாகவும், 7 கோடி ரூபாய் இந்த படத்திற்காக நான் முதலீடு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் படம் வெற்றி பெற்ற நிலையில் தனக்கு அளித்த வாக்குப்படி 40% பணத்தை இதுவரை கொடுக்கவில்லை என்றும், இந்த மோசடியால் 47 கோடி வரை தனக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து அமலாக்கத் துறையினர் இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய போது சில விஷயங்கள் வெளியாகியிருக்கின்றது.

அதாவது படத்தின் தயாரிப்பாளர்கள் படம் 200 கோடி வசூல் செய்து விட்டதாக கூறியிருந்த நிலையில் உண்மையிலேயே மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி வசூல் செய்ததா? என்று அனைவருக்கும் சந்தேகம் இருந்துள்ளது. படத்தின் ப்ரோமோஷன்காக இதுபோன்ற செயல்களை பட தயாரிப்பாளர்கள் செய்திருக்கின்றார்.

இதனால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்ட தயாரிப்பாளர் சங்கம் மலையாள சினிமாவில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் ஒரு நோட்டீசை வெளியிட்டு இருக்கின்றது. அதாவது படத்தின் ப்ரோமோஷன்காக தப்பான வசூலை மக்களுக்கு காட்ட  வேண்டாம் என்று அறிவித்து இருக்கிறார்கள். மேலும் அமலாக்கத் துறையினர் மஞ்சுமேல் பாய்ஸ் பட குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top