சித்ராலயா கோபு இயக்குனராக மட்டுமில்லாமல் திரை உலகில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இவர் காசேதான் கடவுளடா, பெண் ஒன்று கண்டேன், அலங்காரி, ஆசைக்கு வயசில்லை, ஜெயலட்சுமி, வெள்ளை மனசு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கல்யாணப்பரிசு, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், வீட்டுக்கு வீடு, ராஜா வீட்டு கன்னுக்குட்டி உள்ளிட்ட படங்களுக்கு திரைகதை எழுதியுள்ளார்.
இயக்குனர் ஸ்ரீதர் சித்ராலயா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இயக்குனர் ஸ்ரீதரின் நண்பர்தான் கோபு. ஸ்ரீதர் சித்ராலயா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதால் அதிலிருந்து சித்ராலயா கோபு என புகழ்பெற்றார். இவரது மனைவி பெயர் கமலா. திரைத்துறையில் பணிபுரியும் ஆண்களின் மனைவிக்கு எப்போதுமே ஒரு பயம் இருக்கும்.
ஆனால் சித்ராலயா கோபுவின் மனைவி கமலா தனது கணவரை பற்றிய பயம் எதுவும் இல்லாமல், யார் எது சொன்னாலும் நம்ப மாட்டார் என ஒரு முறை சாந்தி நிலையம் படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போது அங்கு இருந்தவர்கள் பேசியுள்ளனர். இதனை கேட்டால் மஞ்சுளா ஒருமுறை கமலாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் நீண்ட நாட்களாக உங்களது கணவரை காதலிக்கிறேன். இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
நான் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் அனுமதி கொடுத்தால்.. என பேசியுள்ளார். உடனே கமலா தாராளமா கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் அவரிடம் பேசுகிறேன் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். கமலாவின் பதிலை சற்றும் எதிர்பாக்காத மஞ்சுளா ஷாக் ஆகிவிட்டார். இந்த தகவலை ஒருமுறை இன்டர்வியூவில் கோபு கூறியதாக சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.