FLASH NEWS: “அமைச்சரவையில் இருந்து விலகுவோம்”…. திடீரென CM விஜய்யை சந்தித்த மாணிக்கம் தாகூர்… சில மணி நேரங்களில் பரபரப்பு திருப்பம்…!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, மக்களவை நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையிலான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பில் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், தமிழகத்திற்குத் தேவையான மத்திய அரசின் பங்களிப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் கூட்டணியிலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் விலகுவோம் என அமைச்சர் ராஜேஷ் குமார் அதிரடி எச்சரிக்கை விடுத்திருந்த சூழ்நிலையில், முதலமைச்சர் விஜய்யை மாணிக்கம் தாகூர் சந்தித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.