மத்திய பிரதேசம் மாநிலம் எந்தூர் மாவட்டம் விஜயநகர் பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் 23 வயது இளைஞருடன் திருநங்கைக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் திருநங்கை இடம் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். மேலும் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் திருமணம் செய்து கொள்வதாக அவரிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார். திருமண ஆசை காட்டி திருநங்கைக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதேசமயம் பெண்ணாக மாறுவதற்கு டெல்லி சென்று திருநங்கை சிகிச்சை எடுத்துள்ளார்.
மேலும் தன்னுடைய காதலனான அந்த இளநருக்கு கார் உள்ளிட்ட 30 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறிய அந்த இளைஞர் திடீரென்று திருநங்கை ஆன காதலியை திருமணம் செய்து கொள்வதற்கு மறுத்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திருநங்கை போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
