அடே… யார் சாமி நீ… போதையில் விமான நிலைய பார்க்கிங்கில் தூங்கி… பிளைடை கோட்டைவிட்ட நபர்… சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!!

By Swetha on ஐப்பசி 2, 2026

Spread the love

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில், புதன்கிழமை மாலை மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் தரையில் படுத்து உறங்கியுள்ளார். நீண்ட நேரமாக அங்கேயே அவர் படுத்துக் கிடந்ததால், அவர் செல்ல வேண்டிய விமானம் அவரை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றது.

பின்னர், இதனைத் கவனித்த உள்ளூர் மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்தப் பயணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

   

வியாழக்கிழமை காலையில் போதை தெளிந்த பிறகு, அந்தப் பயணி தனது வீட்டிற்குத் திரும்பினார். விசாரணையில் அவர் கோரக்பூரைச் சேர்ந்த பாபிஷன் குமார் என்பதும், அவர் துபாய் செல்ல வேண்டியவர் என்பதும் தெரியவந்தது.