“உலகில் 3-வது இடம்.. 90% தமிழர்கள்”… “விஜய்க்கு மலேசியப் பிரதமர் போட்ட சீக்ரெட் கால்…. போனில் பேசிய அந்த ‘ஒற்றை வார்த்தை’ – செம்ம ட்விஸ்ட்….!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தொலைபேசி வாயிலாக மீண்டும் ஒருமுறை தனது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மலேசியப் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் அவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பதிவில் முதல்வர் விஜயைத் தனது நெருங்கிய நண்பர் எனக் குறிப்பிட்டுள்ள அன்வர் இப்ராஹிம், தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், மாநிலத்தின் மிகச் சிறந்த எதிர்காலத்திற்காகவும் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தவும், வழிநடத்தவும் முதல்வர் விஜய்க்குத் தேவையான வலிமையும், ஞானமும் (Strength and Wisdom) தொடர்ந்து கிடைக்க இறைவனை வேண்டுவதாகக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், திரையில் மூன்று மணி நேரத்திற்குள் தீமைகளை வீழ்த்தும் கதாபாத்திரங்களை விட, நிஜ வாழ்க்கையில் தமிழக மக்கள் விஜயிடம் பல மடங்கு பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தொலைபேசி உரையாடலின் போது மற்றுமொரு முக்கியத் தகவலையும் மலேசியப் பிரதமர் பகிர்ந்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வரவுள்ளார். அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசவிருக்கும் அன்வர் இப்ராஹிம், வாய்ப்பு அமைந்தால் அதே பயணத்தின் போது தமிழகத்திற்கு ஒரு சிறிய அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டு முதல்வர் விஜயைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மலேசியப் பிரதமர் தமிழக முதலமைச்சருடன் கொண்டுள்ள இந்தத் தனிப்பட்ட நட்பு, இரு நாடுகளுக்கு இடையேயான பண்பாட்டுத் தொடர்பை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. மலேசியாவில் சுமார் 2 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்களும், 27.5 லட்சம் இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர். இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6.8 சதவீதம் ஆகும். மிக முக்கியமாக, மலேசியாவில் வாழும் இந்தியச் சமூகத்தினரில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தமிழ் பேசுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியத் தமிழர்களின் இந்த வலுவான பின்னணியே, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையும், புதிய முதலமைச்சர் விஜயின் பொறுப்பேற்பையும் மலேசியப் பிரதமர் இவ்வளவு உன்னிப்பாகக் கவனிப்பதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய விஜய், “இலங்கைக்கு அடுத்தாற்போல் இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரிய தமிழ் சமூகம் மலேசியாவில் தான் உள்ளது; மலேசியா தமிழர்களுக்கு மிகவும் சிறப்பானது” என்று குறிப்பிட்டிருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நூற்றாண்டுகள் கடந்த பந்தம் தற்போது அரசியல் ரீதியாகவும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

Sempat berbicara dan bertanya khabar dengan sahabat saya, CM Vijay hari ini dan sekali lagi mengucapkan tahniah atas amanah besar yang sedang beliau galas demi rakyat Tamil Nadu.

Saya turut maklumkan akan ke India pada September nanti bagi menghadiri Sidang Kemuncak BRICS serta… pic.twitter.com/dRd4VWdMQG— Anwar Ibrahim (@anwaribrahim) May 22, 2026

Nanthini

Recent Posts

காலையிலேயே ஷாக்… விஜய் அரசுக்கு ஆதரவு வாபஸ்… அரசியலில் திடீர் பரபரப்பு…!

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசை…

3 minutes ago

SRH ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஆர்சிபியை வீழ்த்திய கையோடு காதலி அதிதியுடன் செல்ஃபி எடுத்து இஷான் கிஷன் கொண்டாட்டம்..!

ஐபிஎல் 2026 தொடரில், பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 55 ரன்கள்…

3 minutes ago

எல்லாரும் என்னை தப்பா பார்த்தாங்க… விஜய் சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதேன்.. நடிகை சோனா உடைத்த திரைக்குப் பின்னால் இருந்த வேதனை..!!

நடிகை சோனா 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஷாஜகான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில்…

6 minutes ago

தமிழகத்தில் திடீர் அதிரடி வேட்டை… 3 நாட்களில் 15,000க்கும் மேற்பட்ட ரௌடிகள் கைது… ஒரே நாளில் கதிகலங்கிய ரௌடிகள்…!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரௌடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகக் காவல் துறை…

7 minutes ago

“அஷ்டமத்து சனி ஓவர்.. இனிதான் அவரோட ஆட்டமே”… விஜய்யின் ஜாதக ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ஷெல்வி… அலறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரது…

12 minutes ago

கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம்… ரகசியமாக திருமணம் செய்துகொண்டாரா கங்கனா ரணாவத்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், தற்போது இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராகவும் வலம் வருபவர் கங்கனா ரனாவத்.…

13 minutes ago