BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

By Nanthini on சித்திரை 16, 2026

Spread the love

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்குச்சீட்டை (படிவம் 12) தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று, பின்னர் தபால் மூலம் அனுப்பும் வசதி நடைமுறையில் இருந்தது; ஆனால் தற்போது அந்த நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய உத்தரவின்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 3.4 லட்சம் அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி மையங்கள் அல்லது அதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதி மையங்களில் (Voter Facilitation Centres) மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குகளைக் கையாளுவதில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், வாக்குப்பதிவில் ஏற்படும் தேவையற்ற தாமதங்கள் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.